கனடாவில் தொழிலாளர்கள் பற்றாக்குறையை தீர்க்க தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்கள் தேவை என்ற அறிவிப்பை CFIB பரிந்துரை செய்துள்ளது.
கனடாவில் கொரோனா பெருந்தொற்றால் தொழிலாளர்கள் பற்றாக்குறை நீடித்து வருகிறது. மேலும் தனி தொழில்களுக்கான கனேடிய கூட்டமைப்பு ( The Canadian Federation of Independent Business – CFIB ) தொழிலாளர்கள் பற்றாக்குறையால் கனடாவில் சிறு தொழில்களும் பாதிக்கப்படுவதாக தகவல் தெரிவித்துள்ளது. எனவே இந்த தொழிலாளர்கள் பற்றாக்குறை தீர்ப்பதற்கு ஊதியத்தை உயர்த்துவது போதுமான ஒன்றாக இருக்காது என்று கூறும் CFIB தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்கினால் விலைவாசி உயருவதோடு நாட்டில் பணவீக்க அழுத்தமும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.
இந்த சூழ்நிலையில் சொந்தமாக தொழில் நடத்துவோர் தற்காலிக வெளிநாட்டு பணியாளர் திட்டத்தை பயன்படுத்திக் கொள்வதும், தானியங்கி இயந்திரங்களை பயன்படுத்துவதும் இந்த பிரச்சினைக்கான தீர்வாக அமையும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் CFIB தற்காலிக வெளிநாட்டு பணியாளர்கள் திட்டத்தை பயன்படுத்துவதும், தானியங்கி இயந்திரங்களை பயன்படுத்துவதும் குறுகிய காலங்களில் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மட்டுமே சாத்தியம் என்று கூறுகிறது.
மேலும் கனடாவில் 1990-களிலிருந்தே வேலை செய்யும் வயதில் இருப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதால் 2050-ஆம் ஆண்டு வாக்கில் வேலை செய்யும் வயதில் இருப்பவர்கள் பெரும்பான்மையோரை இழக்க நேரிடும் என்று கணித்துள்ளது. எனவே தொழில்களில் உள்ள காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய விரைவில் அதிக பணியாளர்களை கொண்டு வரும் தற்காலிக வெளிநாட்டு பணியாளர்கள் திட்டத்தை மேம்படுத்துவதோடு, பொருத்தமான புலம்பெயர்வோரை சரியான இடங்களில் நிரப்புவதனை உறுதி செய்ய வேண்டும் என்று CFIB பரிந்துரை செய்துள்ளது.