Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

12 வயது சிறுவனை அடித்துக் கொன்று குப்பைக் கிடங்கில் வீசிய 4பேர் கைது …!!

திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் சிறுவன்  அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது குறித்து நான்கு பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது

 

 

திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் ஒரு சிறுவன் அடித்துக் கொலை செய்து வீசப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு  தகவல் வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திருச்சி, அரியமங்கலம், அண்ணா நகர் அருகில் உள்ள பெரியார் நகர் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் வாஷித். இந்த 12 வயது சிறுவன் அருகில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு படிப்பை நிறுத்திவிட்டு தற்போது அப்பகுதியில் வேலை ஏதும் செய்யாமல் சுற்றி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தச் சிறுவன் கடந்த 3ம் தேதி வீட்டை விட்டு வெளியேறியவன்  வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவனது பெற்றோர் உறவினர்களிடம் விசாரித்தனர் அவன் கிடைக்காத பட்சத்தில் 7ஆம் தேதி காணவில்லை என அரியமங்கலம் காவல்நிலையத்தில்புகார் அளித்தனர் . இதையடுத்து அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் காணவில்லை என்பது குறித்து அவனது  நண்பர்களிடம் விசாரித்து வந்தனர்.

அப்பொழுது 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவன் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .அப்பகுதியில் முன்னாள் கவுன்சிலர் கயல்விழி சேகர் என்பவர்  மகன் முத்துக்குமார் ஒரு குழுவாக சிறுவர்களை வைத்துக்கொண்டு பல்வேறு தொழில்கள் நடத்தி வருகிறார். அந்த சிறுவர்களை பயன்படுத்தி வந்துள்ளார் .அவருக்கும் அப்துல் ராஷித்கும்இடையே பிரச்சனை ஏற்பட்டதால் முத்துக்குமார் மற்றும் அவருடை நண்பர்கள் 4பெரும் சேர்ந்து அச்சிறுவனை கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது .

Categories

Tech |