Categories
மாநில செய்திகள்

“செம சூப்பர்” இனி பட்டனை அழுத்தினால் போதும்….. அரசுப்பேருந்துகளில் அசத்தல்…!!!!

தமிழகத்தில்  நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னையில் முதற்கட்டமாக மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசர அபாய ஒலி எழுப்பும் பட்டன் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பேருந்தின் உட்பகுதியில் 3 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும், நான்கு இடங்களில் பேனிக் எனப்படும் அவசரகால அழைப்பான் பொருத்தப்படும் என்று அமைச்சர் ராஜ்கண்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், அவசர உதவிக்கு பேனிக் பட்டனை அழுத்தியவுடன் பணிமனைக்கு சென்று சேர்ந்து காவல்துறையினர் உதவியுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பேருந்துகளில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு நடந்தால் அது தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கான இலவச தொலைபேசி எண்கள், அனைத்து பஸ்களிலும் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

பஸ்களில் வயதானவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பல தரப்பினரும் பயணம் செய்கிறார்கள். ஆனால் சில கண்டக்டர்கள் அவர்களை இறக்கி விடுகின்றனர். எனவே இது தொடர்பாக டிரைவர், கண்டக்டர்களுக்கு “கவுன்சிலிங்” கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |