தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக துணை கேப்டன் ரோகித் சர்மா விலகியுள்ளார்.
உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களின் ஒருவரான ரோகித் சர்மா சமீபத்தில் இந்திய அணியின் ஒருநாள் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் .அதோடு டெஸ்ட் அணியின் துணை கேப்டனாகவும் அவர் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு துணை கேப்டனாக இருந்த ரஹானே பதவியில் இருந்து நீக்கப்பட்டார் .இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக ரோகித் சர்மா விலகியுள்ளார் .இந்த காயத்திலிருந்து குணமடைய 4 வார காலம் ஆகும் என்பதால் டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்கவில்லை. இதனால் ரோகித் சர்மாவுக்கு பதிலாக அணியில் புதுமுக வீரராக பிரியங்க் பன்சால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்டில் ரோகித் சர்மா இல்லாதது அணிக்கு மிகப்பெரிய இழப்பு என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார் .
இதுகுறித்து அவர் கூறும்போது,” இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினர். ஆனால் காயம் காரணமாக தென்ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் அவர் இல்லாதது அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். ஏனென்றால் அவர் நல்ல பார்மில் இருக்கிறார். அதே சமயம் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்ட நிலையில் அவர் விளையாட முடியாமல் போனது மிகப் பெரிய ஏமாற்றம் தான். அதே சமயம் ரோகித் சர்மா விலகிய நிலையில் அணியில் இளம் வீரர்கள் வாய்ப்பு கிடைத்துள்ளது .அவர் நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார் .தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், கே.ல்.ராகுல் ஜோடி களமிறங்க வாய்ப்பு இருப்பதால் புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது கடினம்தான்.