ஒமைக்ரான் வைரசை 70% பைசர் மருந்து கட்டுப்படுத்தும் என்று ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் உருவான உருமாறிய ஒமைக்ரான் தொற்று தற்போது நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. உலக நாடுகளில் தொற்று பரவி வருவதால் இவற்றை எப்படி தடுப்பது என்று ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவிலும் இதுவரை 44 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒமைக்ரானால் மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவு பாதிப்பு ஏற்படாமல் பைசர் மருந்து 70% தடுப்பதாக தென்ஆப்பிரிக்கா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. தென்ஆப்பிரிக்காவில் மீண்டும் தொற்று ஏற்பட ஒமைக்ரான் 90% காரணமாக உள்ள நிலையில் இதனை தடுக்கும் மருந்தாக பைசர் தடுப்பூசி உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.