பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணின் 6 பவுன் தங்க சங்கலியை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் வெற்றிலைக்கார தெருவில் ஆசிக்ரகுமான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி பாத்திமா நுவைரா உறவினரின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக பரமக்குடிக்கு அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பேருந்தில் கூட்ட நெரிசலாக இருந்துள்ளது.
இதனை பயன்படுத்திகொண்ட மர்ம நபர் யாரோ பாத்திமா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். இதனையடுத்து கழுத்தில் சங்கிலி இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைந்த பாத்திமா நுவைரா ராமநாதபுரம் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.