அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கான தகுதித் தேர்வு எழுதுவது நடைமுறையிலுள்ளது. தற்போது மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் மத்திய ஆசிரியர் தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் 15-வது ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு கொரோனா தொற்றால் தள்ளிவைக்கப்பட்டு, டிசம்பர் 13-ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 16-முதல் நடைபெற இருக்கிறது. ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே தற்போது நுழைவுச்சீட்டு வெளியாகிறது.
இந்த க்ஷதேர்வு கணினி வாயிலாக ஆன்லைன் மூலம் நடைபெறும் என்பதை மத்திய அரசு வாரியம் முன்கூட்டியே அறிவித்துள்ளது. CBT என்று அழைக்கப்படும் இந்த ஆன்லைன் தேர்வு மொத்தம் 20 மொழிகளில் நடைபெற உள்ளது. இந்த மாதம் 13-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை எழுதும் தேர்வர்களுக்கு மட்டுமே நுழைவுச் சீட்டு இன்று வெளியாகும் என்று ஜனவரி 1 முதல் 13 வரை தேர்வு எழுதவிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுச்சீட்டு கூடிய விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கான தேர்வு எழுதும் முறையில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது .
Problem solving, Reasoning, critical thinking problem solving, reasoning, critical thinking ஆகியவை சார்ந்த கேள்விகள் கேட்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேள்வி தேர்வு எழுதும் நபரின் புரிதலை சோதிக்கும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் சிபிஎஸ்இ ஆசிரியர் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை இணையதளம் மூலம் https;//ctet.nic.in.என்ற லிங்கில் சென்று பெற்றுக் கொள்ளலாம். இதில் எந்த நகரத்தில், எந்த தேதியில் மாற்றி தேர்வு எழுதும் மையத்தை பற்றிய விவரம் குறிப்பிட்டுள்ளது என்று மத்திய அரசு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வு எழுதுவதாக ஆன்லைன் மூலம் பதிவு செய்து தெரிவித்தவர்கள், இன்றே சென்று ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.