Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு…. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

மதுரை-பழனி, பழனி-கோவை ரயில்கள் இணைப்பு ரயில்களாக செயல்பட்டு வருகிறது. அதாவது, மதுரையில் இருந்து பழனிக்கு செல்லும் ரயில் அங்கிருந்து தொடர்ந்து கோவைக்கும் செல்லும். அதேபோன்று கோவையில் இருந்து பழனிக்கு செல்லும் ரயில் அங்கிருந்து தொடர்ச்சியாக பழனி-மதுரை சிறப்பு ரயிலாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், பொள்ளாச்சி வழியே இயங்கும் முன்பதிவு இல்லாத சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க நேரம் மாற்றப்பட்டுள்ளது.

பகுதி நேர அட்டவணைப்படி, இந்த ரயில் கோவையில் மதியம் 2 மணிக்கு பதிலாக 2;33 மணிக்கு புறப்படும். கிணத்துக்கடவு 2.54 மணி பொள்ளாச்சி 3.36 மணி அளவில் உடுமலை வழியாக சென்று மாலை 4:30 மணி அளவில் பழனி சென்றடையும். மேலும் கோவை-பழனி விரைவு ரயில் தற்போது பிற்பகல் 2:10 மணிக்கு கோவிலிளிருந்து புறப்பட்டு மாலை 4;40 மணிக்கு பழனி சென்றடைகிறது.

எதிர் மார்க்கத்தில் 10:35 மணிக்கு பழனியில் இருந்து புறப்பட வேண்டிய ரயில் 11 மணிக்கு புறப்படுகிறது. உடுமலை 11;55 மணிக்கும் ,பொள்ளாச்சி 12;29 மணிக்கும் 13:15 கோவையை சென்றடையும். இந்த நேர மாற்றம் வரும் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டம் அறிவித்துள்ளது.

Categories

Tech |