இந்தியாவில் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளில் உள்ள 41,177 காலிப்பணியிடங்கள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். இதுபற்றிய தகவலை கீழே பார்க்கலாம். கொரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் அதிக அளவில் இருந்தபோது, நேரடியாக மக்களவை கூட்டத்தொடர் நடத்தப்படவில்லை. இருந்தாலும், காணொளி வாயிலாக கடந்த ஆண்டு முதல் அமைச்சர்கள் கூட்டம் நடந்து வருகிறது. தற்போது நோய்த்தொற்று குறைந்துள்ளதால், நேரடியாக நடத்தப்படுகிறது. நாட்டில் பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றில் உள்ள காலிப் பணியிடங்கள் தொடர்பான கேள்வி ஒன்று மக்களவையில் கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி நிலவரப்படி, நாட்டில் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளில் 8,05,986 பணியிடங்கள் இருக்கிறது. இவற்றில் தற்போது அதிகாரிகள் துணை அலுவலர்கள் என்று 41,177 காலி பணியிடங்கள் 3 பிரிவுகளில் உள்ளது. வங்கிகளில் மொத்தமுள்ள காலிப்பணியிடங்கள் 95% அளவிற்கு நிரப்பப்பட்டுள்ளது. ஊழியர்கள் பணி ஓய்வு உள்ளிட்ட காரணங்களினால் சிறிய அளவிலான பணியிடங்கள் மட்டுமே காலியாக இருக்கிறது. அவற்றின்படி, நாடுமுழுவதும் எஸ்பிஐ வங்கியில் 8544,பஞ்சாப் நேஷனல் வங்கியில் 6,743,சென்றல் வங்கியில் 6295,இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 5,112,பேங்க் ஆப் இந்தியா 4,848 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 6 வருடங்களில் பொதுத்துறை வங்கிகளிலிருந்து எந்த ஒரு பணியிடமும் நீக்கப்படவில்லை என்றும் இறுதியாக 2016- ஆம் ஆண்டு பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியில் இருந்து ஒரு பதவி நீக்கப்பட்டு உள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories
நாடு முழுவதும் பொதுத் துறை வங்கிகளில்…. 41,177 காலிப்பணியிடங்கள்…. மத்திய நிதி அமைச்சர் திடீர் விளக்கம்….!!!!
