மகளிர் சுய உதவிக்குழு நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்று உள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்றார். மகளிர் சுய உதவிக்குழு கண்காட்சியை தற்போது அவர் பார்வையிட்டு வருகிறார். இந்த நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 3,000 கோடி கடனுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிட்டத்தக்கது.