கோவிலில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள நல்லாம்பாளையம் கிராமத்தில் ஏரிக்கரையோரம் கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் நிர்வாகிகள் பொதுமக்களிடமிருந்து காணிக்கை பெற்று கடந்த சில மாதங்களாக கோவிலை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் உண்டியல் பணத்தை திருடியுள்ளனர்.
மேலும் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவையும் மர்ம நபர்கள் திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவிலில் கொள்ளையடித்து கொன்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.