இந்தோனேசியா நிலநடுக்கத்தால் இந்தியாவில் எந்த பாதிப்பும் இல்லை என்று இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் மெளமரே என்ற இடத்திலிருந்து வடக்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் 18.5 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள், அலுவலகங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து வீதிகளில் ஓட்டம் பிடித்தனர்.. 7.6 ரிக்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் கடலில் சுனாமி பேரலைகள் உருவாகக் கூடும் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் அந்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ல் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தமிழக கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தோனேசியா நிலநடுக்கத்தால் இந்தியாவில் எந்த பாதிப்பும் இல்லை என்று இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.. இந்தோனேசியாவில் சுனாமி அலைகள் உருவாகலாம் என எச்சரிக்கப்பட்ட நிலையில், எச்சரிக்கை மையம் இந்த தகவலை அளித்துள்ளது.. எனவே இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை..