பிரபல நடிகரான அர்ஜுன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கொரானா தொற்று காரணமாக மக்கள் மற்றும் பிரபலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்போதுதான் எல்லாம் பழைய நிலைமைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இருப்பினும் நோய் தொற்று இன்னும் முடியவில்லை. அடுத்தடுத்து மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், சமீபத்தில் கமல்ஹாசன் அவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் குணம் அடைந்துள்ளார். இந்நிலையில், பிரபல நடிகரான அர்ஜுனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.