பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3 முதல் 6ம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கதொகை வழங்கும் திட்டம் தொடங்க உள்ளது. இந்த ஊக்க தொகை வழங்குவதற்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு பதில் வங்கிகளில் தனியார் வைப்புநிதி கணக்கு தொடங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாணவியருக்கும் தனித்தனியாக வங்கி கணக்கு தொடங்குவதற்கு ஏதுவாக ரூ.16.75 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஊக்கத் தொகை பெற விரும்பும் மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரம் என்ற அளவில் இருக்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே ஊக்கத்தொகை நேரடியாக வங்கி கணக்கு மூலம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.