Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரானை எதிர்கொள்ள தயார்”…. சவால் விடும் பிரதமர்…. வெளியான முக்கிய தகவல்….!!

சிங்கப்பூர் பிரதமர் ஒமிக்ரான் வைரஸை எதிர்கொள்ள தங்கள் நாடு தயாராக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது “ஒமிக்ரான்” வகை கொரோனா வைரஸ் குறித்து பேசியுள்ளார். அதில் சிங்கப்பூரில் கொரோனா தொற்று பரவல் கடந்த மூன்று மாதங்களில் வெகுவாக குறைந்துள்ளதாக கூறிய பிரதமர் எங்கள் சுகாதார அமைப்பை நாங்கள் பாதுகாத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஒமிக்ரானால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ளவும் நாங்கள் தயாராக உள்ளோம். எங்கள் நாட்டில் தயார் செய்யப்படும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் ஒமிக்ரானை எதிர்கொள்ள முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தில் முதன் முதலாக ஒமைக்ரான் பாதிப்பு முன் களப்பணியாளர் ஒருவருக்கு உறுதியானது. அந்த நபர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர் என்று கூறப்படுகிறது. மேலும் சிங்கப்பூரில் மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். சிங்கப்பூரில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2.73 லட்சமாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 794-ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |