Categories
தேசிய செய்திகள்

BREAKING : பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு…. 2 காவலர்கள் உயிரிழப்பு….!!!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவலர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரின் பந்தாசாவு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பயங்கரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 14 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியது. உடனடியாக மீட்கப்பட்ட அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 காவலர்கள் தற்போது உயிரிழந்துள்ளனர். மீதம் 12 காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |