Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர்…. D BLOCK பட சென்சார்…. முக்கிய தகவல் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் முக்கிய கதாநாயகர்களில் ஒருவரான தனக்கே உரியபாணியில் விதவிதமாக ஆக்க்ஷன் திரில்லர், க்ரைம் த்ரில்லர், ஹாரர் திரில்லர் மற்றும் சைக்காலஜிக்கல் திரில்லர் என்று தொடர்ந்து வித்தியாசமான கதைக்கலங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் நடிகர் அருள்நிதி. இந்தநிலையில் இவர் நடிப்பில் அடுத்தடுத்து த்ரில்லர் திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், தேஜாவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அருள்நிதி அடுத்ததாக இயக்குனர் இன்னசி பாண்டியன் இயக்கத்தில் நடித்துள்ள டைரி திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. முன்னதாக, தமிழகத்தின் பிரபல யூடியூப் சேனல் எருமசாணி மூலம் யூடியூப் சேனலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த விஜய் விருஸ் இயக்குனராக களமிறங்கும் D-block எனும் திரைப்படத்திலும் அருள்நிதி நடித்து வருகிறார்.

எம்என்எம் பிலிம்ஸ் சார்பில் அரவிந்த் சிங் தயாரித்துள்ள d-block படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வழங்குகிறது. இந்தபடத்தில் கதாநாயகியாக அவந்திகா மிஸ்ரா நடிகை உமா ரியாஸ் தலைவாசல் விஜய் கரு பழனியப்பன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவில் ரான் எத்தன் யோஹன் இசையமைத்துள்ளார். இந்தநிலையில் d-block படத்தின் சென்சார் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விரைவில் ரிலீசாக உள்ள திரில்லர் படமான D-Block படத்திற்கு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |