உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெறும் கங்கை ஆரத்தி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று கொண்டார்.
உத்திரபிரதேசம் சென்றுள்ள பிரதமர் மோடி வாரணாசியில் புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை திறந்துவைத்து காசி கங்கை நதியில் நீராடினார். சுமார் 339 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்திற்கு 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தில் சுற்றுலா வசதி மையம், வேத மையம், உணவு விடுதி உள்ளிட்ட 23 கட்டிடங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து அங்குள்ள ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். தற்போது வாரணாசியில் நடைபெறும் கங்கை ஆரத்தி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.