ராஜமௌலி இயக்கத்தில், மரகதமணி இசை அமைப்பில் ஜூனியர் என்டிஆர் ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் ஆர்ஆர்ஆர். இந்த படத்தின் டிரைலர் கடந்த வாரம் 5 மொழிகளில் வெளியானது. ட்ரெய்லருக்கு அனைத்து மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை அந்த படம் பெற்றது. அந்தப்படத்தின் டிரைலரை படத்தின் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்யாமல் சென்னையை சேர்ந்த மற்றொரு எடிட்டர் எடிட் செய்திருக்கிறார்.
அந்த எடிட்டருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நேற்று ராஜமவுலி இந்த கற்பனையான வரவேற்புக்கு ஒருவரின் திறமை தான் சிறந்த காரணம். அவர் எடிட்டர் பிரவீன். அவர்தான் ஆர்ஆர்ஆர் டிரைலரை கட் செய்துள்ளார். மேலும் உங்கள் நேரத்திற்கும், பொறுமைக்கும், முயற்சிக்கும் நன்றி பிரதர் என்று அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஒரு படத்திற்கு அதன் டீசர் மற்றும் ட்ரெய்லருக்கு கிடைக்கும் வரவேற்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆர்ஆர்ஆர் ஹிந்தி ட்ரெய்லர் தற்போது 40 மில்லியன் பார்வைகளையும், தெலுங்கு டிரைலர் 31 மில்லியன், கன்னட ட்ரைலர் 6 மில்லியன், மலையாள ட்ரெய்லர் 3 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது. இதனால் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.