Categories
மாநில செய்திகள்

முதியோர்களுக்காக அசத்தல் திட்டம்…. “குஷியில் தாத்தா, பாட்டி”….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

பள்ளி சாரா கல்வி மூலமாக கிராமப்புறத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் பகுத்தறிவு இல்லாத அவர்கள் அனைவருக்கும் கையெழுத்துப் போட கற்றுக் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பகுதியில் 10 ஆயிரம் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வதற்கு ஏதுவாக ஆடு, அயன்பாக்ஸ், சைக்கிள் உள்ளிட்ட பல நலத்திட்டங்களை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மக்களின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி 12 மாவட்டங்களில் சோதனை முறையில் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அமோக வரவேற்பு பெற்றதால், ஜனவரி மாதம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கிராமப்புற பகுதியில் எழுத்தறிவு இல்லாத மக்களுக்கு கைநாட்டு இல்லாத ஒரு முறையை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அனைவருக்கும் கிராமப்புறங்களில் சென்று கையெழுத்து போட கற்றுக் கொடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார். இதனால் கிராமப்புறங்களில் உள்ள தாத்தா பாட்டிகள் தாங்களும் கையெழுத்து போட போகிறோம் என்ற குஷியில் உள்ளனர்.

Categories

Tech |