தென்னாப்பிரிக்காவில் ஜனாதிபதி சிரில் ராமபோசாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்க நாட்டின் ஜனாதிபதி சிரில் ராமபோசாவின் உடல்நலத்தில் சிறிது பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அவருக்கு லேசான அறிகுறிகளுடன் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த தகவல் ஜனாதிபதியின் அறிக்கை மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராமபோசா கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்தியுள்ளார்.
இந்த நிலையில் ராமபோசா ஒமிக்ரோன் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்று அந்த அறிக்கையில் கூறப்படவில்லை. இவ்வாறு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ராமபோசா கேப்டவுனில் தனிமைப்படுத்தப்பட்டு, தென்னாப்பிரிக்க இராணுவ சுகாதார மையத்தால் கண்காணிக்கப்பட்டு வருகிறார். இதனால் ராமபோசா அடுத்த வாரத்துக்கான அனைத்து பொறுப்புகளையும் துணை ஜனாதிபதி டேவிட் மபுசாவிடம் ஒப்படைத்துள்ளார். இதனிடையில் ஜனாதிபதியுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.