உஸ்பெகிஸ்தானில் வாயு கசிவால் வெடி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள நாமங்கள் பகுதிக்கு கிழக்கே ஒரு வீட்டில் வாயு கசிவால் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு தொடர்ந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த தீ விபத்தினால் அந்த குடியிருப்பில் வசித்து வந்த 3 குழந்தைகள் மற்றும் பெற்றோர் 2 பேர் என மொத்தம் 5 பேர் பலத்த காயமடைந்தனர்.
இதனையடுத்து அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.