கோவையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு ஆட்டோ டிரைவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வெளியில் அனுப்புவதற்கு தயக்கம் காட்டி வருகின்றன. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனை பள்ளியில் விடுவதாக கூறி அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுனர் வெள்ளைச்சாமி அந்த மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
பிறகு அந்த மாணவன் இதுகுறித்து பள்ளி முதல்வருக்கு தெரிவிக்க, அவர் காவல்துறையினரிடம் இதுதொடர்பாக புகார் அளித்தார். புகாரின்பேரில் துடியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வெள்ளைச்சாமியை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.