ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் பிரதமர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இஸ்ரேல் பிரதமரான நஃப்தாலி பென்னட் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று உள்ளூர் நேரப்படி 4.30 மணியளவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேலில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார் என்று பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதிலும் இந்த சுற்றுப்பயணத்தின் போது அவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசரான ஷேக் முகம்மது பின் ஸயீது அல்நஹ்யான் அவர்களை அபுதாபியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று பிரதமரின் அலுவலகம் வெளியிட்ட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல் இஸ்ரேல் பிரதமர் என்ற பெருமையும் இவரையேச் சாரும்.