நடிகர் அஜித் நடிப்பில் வெளியான “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து , அஜித் நடிக்கும் வலிமை படப்பிடிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
தல அஜித் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட இரு படங்களுமே வெற்றியடைந்த நிலையில், இயக்குநர் எச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் இருவரும் இணைந்து வலிமை திரைப்படத்தை உருவாக்கி வருகின்றார்கள்.இப்படத்தில் அஜித் இரு வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது . மேலும் இந்த படத்தில் தல அஜித் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் வலிமை படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 13ம் தேதி ஐதராபாத்தின் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது.தல அஜித்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் பிரபல நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வலிமை அருண் விஜய், நிக்கி கல்ராணி உள்ளிட்ட ஒருசிலர் நடிக்க உள்ளதாகவும் இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.