ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் தான் வெங்காயம் விலை 25 ரூபாய்க்கு விற்கப்படுவதாக அம்மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது பெரும்பாலான பகுதியில் வெங்காயத்தின் விலை 180 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ஆந்திர மாநில சட்டசபையில் பேசிய முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வெங்காயத்தின் விலையேற்றம் முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயமாகும் என்று ஆனால் ஆந்திராவில் வெங்காயம் ஒரு கிலோவிற்கு 25 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்படுவதாக அவர் கூறினார். பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து வருவதால் தங்கள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.