செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்களை மீது கண்டிப்பாக வன்முறை என்பது எல்லா பக்கமும் இருக்கிறது, மாணவர்கள் அளவிலும், ஆசிரியர்கள் அளவிலும் இருக்கிறது. இதை எப்படி நாம் கையாளவேண்டும் என்பதுதான் முக்கியமாக நோக்கமாக இருக்க வேண்டும். நான் சொல்வது மாணவர்களை வந்து ஆசிரியர் பெருமக்கள் கண்டிக்கிறார்கள் என்று சொன்னால் அதற்கு என்று ஒரு அளவு இருக்கிறது. அளவை மீறி போய், நம் சமூக வலைதளங்களில் வருவதை நாம் பார்க்கிறோம் ஒரு குழந்தையைப் போட்டு பிரம்பால் அடிக்கிறது அதெல்லாம், அந்த காலம் முடிஞ்சி போச்சு, அதையும் மீறி சில இடங்களில் நடக்கிறது என்றால் அதை தடுக்க வேண்டும்.
அப்படி நீங்கள் சொல்கின்ற மாதிரி அந்த லிமிட்டை தாண்டி யாரெல்லாம் மிருகத்தனமாக அடிக்கின்ற ஒரு சூழ்நிலையிலும் வருகின்றதோ கண்டிப்பாக அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து. பரிட்சையை பொறுத்தவரையில் நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன், ஜனவரி மாதம் ரிவிஷன் எக்ஸாம் நடக்கும் என்ன முறையில் தேர்வு நடக்குமா அதே முறையில் ஜனவரி மாதம் தேர்வு நடக்கும், இரண்டாவது ரிவிஷன் தேர்வு மார்ச் மாதம் நடக்கும். இதில் வந்து எந்தவித குழப்பமும் யாருக்கும் தேவையில்லை, இதை பொதுத்தேர்வு வரும்பொழுது அது ஏப்ரல் மாதம் நடத்துவதா, அல்லது மே மாதம் நடத்துவதா என்பதை வந்து அந்த பாடங்கள் எப்படி முடிவு பெறுகிறதோ அன்றைக்கு இருக்கின்ற சூழ்நிலையை பார்த்து முடிவு செய்யப்படும். இப்போதைக்கு மாணவச் செல்வங்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஜனவரி மாதம் ரிவிஷன் தேர்வுக்கு தயாராகிக் கொள்ளுங்கள், பொங்கல் கழிந்து கண்டிப்பாக அது வந்து விடும், அதேமாதிரி மார்ச் மாதம் இரண்டாவது தேர்வுக்கும் தயாராகிக் கொள்ளுங்கள் என்பது என்னுடைய விருப்பம். பொதுத் தேர்வு நடத்தாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் இப்போதைக்கு எதுவுமே கிடையாது, கண்டிப்பாக நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
இப்போதைக்கு ரிவிஷன் தேர்வு ஜனவரிக்கும், மார்ச்க்கும் தயாராகி கொள்ளுங்கள் அதுதான் என்னுடைய கருத்து. என்.இ.பில வந்து நிறைய நம்ம இளந்தடிகள் வரும்போது என்.இ.பியை ஒட்டியே தான் நீங்கள் கேட்டீர்கள், நாங்கள் சொல்வது எந்தந்த திட்டங்கள் நமக்கு பயனுள்ளதாக, நம்முடைய மாணவச் செல்வங்களுக்கு பயனுள்ளதாக, நம்முடைய கல்விக்கு பயனுள்ளதாக இருக்கின்றதோ அதை எந்த கண்ணும் கருத்துமாக இருந்து என்.இ.பி எந்த எண்ணத்தோடு உள்ளே நுழைக்கனும் என்று நினைக்கிறார்களோ என்று தெரியவில்லை. அதெல்லாம் வராமல் எப்படி செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய கடமையாக, என்னுடைய பணியாக இருக்கும்.
ஆகவே அதில் இருக்கின்ற நல்லவை மட்டும் நாம் எடுத்துக் கொண்டு கண்டிப்பாக செய்வோம். 2774 காலி பணியிடங்களை இப்போது நிரப்ப போகிறோம். ஆறுமாதத்தில் அவர்கள் இருக்க போகிறார்கள். அதற்கு அப்பாற்பட்டது ஏற்கனவே 35 சதவீதத்தில் இருந்து 55 சதவீதம் வரைக்கும் நாம் பாடங்களை முடித்து வருகிறோம். சனிக்கிழமையும் பள்ளிகள் வைத்துக் கொண்டிருக்கிறோம், கண்டிப்பாக அந்த பாடங்களை முழுமையாக கற்பித்து முடிக்கப்படும். ஏற்கனவே உங்களிடம் சொன்ன மாதிரி மார்ச் மாதம் ரிவிஷன் தேர்வு நடைபெறும் போது எவ்வளவு பாடங்கள் முடித்திருக்கிறார்கள் அதைப் பார்த்து அதற்கு தகுந்தார்போல் பொது தேர்வு வைக்கப்படும் என தெரிவித்தார்.