Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அடிமேல் அடி வாங்கும் இங்கிலாந்து” ….! ஆஸி மண்ணில் தொடரும் மோசமான சாதனை …..!!!

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. இதில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.  இதில் முதல் டெஸ்டில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் மோசமான சாதனையை படைத்துள்ளது.

குறிப்பாக இங்கிலாந்து  ,ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக விளையாடிய 11  டெஸ்ட் போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெறவில்லை .இதில் 10 டெஸ்ட் போட்டி தோல்வியிலும், ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது .அதோடு கேப்டன் ஜோ ரூட்  தலைமையிலான இங்கிலாந்து அணி 22-வது தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணி கேப்டன்களில் அதிக தோல்வியை சந்தித்த அலஸ்டயர் குக்கின் மோசமான சாதனையை தற்போது ஜோ ரூட் சமன் செய்துள்ளார்

Categories

Tech |