நாடு முழுவதும் கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்ததால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவே வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப் பட்டு வந்தது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியது. எனவே மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நாடு முழுவதும் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் நேரடி எழுத்துத் தேர்வாகவே நடத்தப்படும் என்று யுசிஜி செயலாளர் ரஜ்னீஷ் ஜெயின் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி தேர்வுகளை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது.