”தளபதி 66” படம் பற்றிய தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”பீஸ்ட்”. இதனையடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பை விஜய் முடித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில்,”தளபதி 66” படம் பற்றிய தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி, இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் மார்ச் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.