Categories
மாநில செய்திகள்

“1 முதல்‌ Ph. D படிப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு”….  வெளியான ஹேப்பி நியூஸ்…. கால அவகாசம் நீட்டிப்பு….!!!

1 முதல் பிஹெச்டி படிப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஒன்று முதல்பி.எச்‌.டி படிப்பு வரை தொழில் கல்வி, தொழில்நுட்ப கல்வி, மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் பயிலும் இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் மதங்களை சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த விண்ணப்பங்களை http://www.scholarships.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 15.12.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த சிறுபான்மையின மாணவ மாணவியர்கள் இந்த காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நல அலுவலரை தொடர்பு கொண்டு பேசலாம் என்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |