வீட்டில் பலர் செல்லப் பிராணிகளை வளர்த்து வருவார்கள். இந்த நிலையில், பிரேசில் நாட்டில் 250 கிலோ எடையுள்ள பன்றியை ஒரு பெண்மணி செல்லமாக தன் வீட்டில் வளர்த்து வருகிறார். அந்தப் பன்றியின் பெயர் லிபியா. 3 வயதுடைய அந்தப் பன்றி ஒரு நாளைக்கு 5 கிலோ பழம், காய்கறிகள் மற்றும் இதர தீனிகளை சாப்பிடுவதாக அதன் உரிமையாளர் கூறியுள்ளார். அந்தப் பன்றி சிறிய வகை இனத்தை சேர்ந்தது என நினைத்து அதை வாங்கியதாகவும், அதை வளர்க்க ஆகும் அன்றாட செலவு மிக அதிகமாக இருந்தாலும்கூட அந்தப் பன்றியின் மீது அளவுகடந்த அன்பு வைத்துள்ளதால் அதை விற்பனை செய்ய தயாராக இல்லை என்று அதன் உரிமையாளர் கூறியுள்ளார்.
Categories
ஐயையோ! முடியல…. விடவும் மனசு வரல!… ரொம்ப செலவு ஆகுது சோகத்தில் உரிமையாளர்….!!!!
