கொரோனா தடுப்பூசி போட்ட அவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில்கள் விற்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் உள்ள மதுபான கடையில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில்கள் விற்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநகராட்சி அனுப்பியிருந்தால் சுற்றறிக்கையை மதுபான கடைகளில் ஒட்டாமல் இருந்ததற்கு எச்சரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு ஊசி போட்டவர்களுக்கு மட்டும் மதுபானம் விற்க வேண்டும் என்ற நடைமுறைகளை பின்பற்றுகிறார்களா என கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக கமிஷனர் பேசுகையில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மதுபானம் இருக்க வேண்டும். இதுதொடர்பாக யாரேனும் தகராறு செய்தால் உடனடியாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என கூறினார்.