தமிழக காவல்துறை டிஜிபியின் கட்டுப்பாட்டில் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாகவி பாரதியாரின் 140 பிறந்தநாள் விழா சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாரதியாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர் “பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மறுநாள் பட்டமளிப்பு விழா நடைபெற இருந்தது. அது ஏற்கனவே திட்டமிட்டிருந்த ஒரு நிகழ்வு. அமைச்சர்கள், மாணவர்கள் என அனைவரும் இதற்காக காத்திருந்தால் தான் ஆளுநர் முப்படை தலைமை தளபதி பிபின் ராகத்திற்கு அஞ்சலி செலுத்த நேரில் செல்ல முடியவில்லை.
இது ஆளுநரின் தனிப்பட்ட முடிவு. இதனை அரசியலாக்க வேண்டாம் என்று கூறினார். மேலும் தமிழக டிஜிபியின் கட்டுப்பாட்டில் தமிழக காவல்துறை இல்லை. டிஜிபியின் கையிலிருந்து காவல்துறை நழுவிவிட்டது. ராணுவ வீரர்களின் மரணம் குறித்து தவறான கருத்தை பேசியவர்கள் மீது நடவடிக்கை கட்டாயம் எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார் .தமிழக காவல்துறை டிஜிபியை அண்ணாமலை இப்படி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .