மிகவும் பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமான ஃபிளிப்கார்ட் நிறுவனமானது பிரபலமான தனியார் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியுடன் இணைந்து ஓவர் டிராஃப்ட் வசதியில் ரூ. 25 லட்சம் வரையிலான கடனை தருகிறது.
இதற்காக விற்பனையாளர்கள் ஃபிளிப்கார்ட் தளத்தில் பதிவு செய்து இருந்தால் மட்டும் போதும். ஏனெனில் ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனையாளராகப் பதிவு செய்தவர்கள் சுலபமாக இந்த கடனை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓவர் டிராஃப்ட் வசதி மூலமாக அதாவது வங்கி கணக்கில் பணம் இல்லாமலே இந்த கடன் தொகையை எடுக்க முடியும். இந்த கடனுக்கு யாரெல்லாம் எப்படி..? எவ்வாறு..? விண்ணப்பிப்பது போன்ற விவரங்களை நாம் அறியலாம். அதாவது சிறு குறு நடுத்தர நிறுவனங்களில் எளிதாகத் தொழில் துவங்க ஏற்றவாறு ஃபிளிப்கார்ட் நிறுவனம் ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து இந்த வாய்ப்பை தருகிறது. இந்த அறிய வாய்ப்பை சொந்தமாக தொழில் தொடங்க ஆசை இருப்பவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். பிளிப்கார்ட் தளத்தில் விற்பனையாளர்களாக பதிவு செய்திருந்தாலே இந்த ஓவர் டிராஃப்ட் சலுகையை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
இதனுடைய சிறப்பி அம்சம் என்னவென்றால் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் கணக்கு இன்றி மற்ற வங்கிகளில் கணக்கு வைத்து இருந்தாலும் நீங்கள் இந்த கடனை பெற்றுக்கொள்ள முடியும். அதற்காக ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் கரண்ட் அக்கவுண்ட் தொடங்கி இருந்தால் மட்டும் போதுமானது. அதேபோன்று ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் கரண்ட் அக்கவுண்ட் வைத்து இருப்பவர்களுக்கு உடனே ஓவர் டிராஃப்ட் வசதி வாயிலாக கடன் கிடைக்கும். இதனையடுத்து டிஜிட்டல் முறையிலேயே கணக்கு தொடங்கலாம். அதற்குரிய கேஒய்சி சரிபார்ப்பு கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐசிஐசிஐ வங்கியின் சுய வேலைவாய்ப்பு பிரிவு தலைவர் பங்கஜ் காட்கில் பேசியபொது ‘தொழில் தொடங்க நினைப்பவர்கள், சிறு தொழில் செய்பவர்களின் நலனுக்காகவே இந்த சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்றார். ஆகவே விண்ணப்பிப்பது எப்படி என்றால்,
1. தகுதியுள்ள விற்பனையாளர்கள் தங்கள் Flipkart Seller Hub அக்கவுண்ட் போர்ட்டலில் ICICI வங்கிச் சலுகையைக் பார்க்க முடியும்.
2. Flipkart Seller Hub போர்ட்டலிலுள்ள பேனரைக் கிளிக் செய்வதன் மூலமாக விற்பனையாளர் ICICI வங்கியின் InstaOD தளத்திற்கு செல்வார்கள்.
3. விற்பனையாளர் உள்ளே நுழைந்ததும், டிஜிட்டல் விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும்.
4. அதன்பின் அனுமதித் தொகையை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு விற்பனையாளரிடம் இருந்து தொகை உறுதி செய்யப்பட்டவுடன், OD உடனடியாக அனுமதிக்கப்படும். ஏற்கெனவே விற்பனையாளர் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் நடப்புக் கணக்கு வைத்து இருந்தால்,உடனடியாக OD ஐப் பயன்படுத்தத் தொடங்கலாம்.