தமிழ் திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயருடன் வலம் வரும் நடிகை நயன்தாரா தற்போது அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் களமிறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயருடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா, தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . இவர் தற்போது அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் களமிறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக தோல் மருத்துவரான ரெனிடா ராஜனுடன் இணைந்து “தி லிப் பாம்” என்ற கம்பெனியை தொடங்கியுள்ளார்.
இது முழுக்க முழுக்க லிப் பாமிற்காக தொடங்கப்பட்ட நிறுவனம் என்று தெரியவந்துள்ளது. இந்த கம்பெனி குறித்த தகவலை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர்களின் முயற்சிக்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.