Categories
மாநில செய்திகள்

BREAKING : ‘வெளிநாடுகளில் இருந்து வந்த 18 பேருக்கு கொரோனா’…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்த 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளதாவது: “வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 18 பேருக்கு டெல்டா வகைகள் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தயக்கமின்றி முன்வரவேண்டும். உருமாறும் வைரஸை மனதில் வைத்துக்கொண்டு தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தடுப்பூசி போடவேண்டும். முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |