Categories
விளையாட்டு

பெரும் சோகம்….! இளம் பிரபலம் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…. அதிர்ச்சி….!!!

பஞ்சாப்பை சேர்ந்த பிரபல துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கவுர் சந்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கவுர் சந்து. இவருக்கு வயது 17 . பஞ்சாப்பை சேர்ந்த இளம் வீராங்கனையான இவர் முதலில் நீச்சல் போட்டியில் பங்கேற்றார். பின்னர் 2017ஆம் ஆண்டு முதல் துப்பாக்கி சுடுதலில் கால் பதித்த இவர் சமீபத்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். பின்னர் பாட்டியாலாவில் நடந்த தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இருப்பினும் இதில் தோல்வியை சந்தித்ததால் மனமுடைந்து காணப்பட்டார்.

கடந்த 9ஆம் தேதி பர்த் கோட்டில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மன அழுத்தம் காரணமாக இளம் வீராங்கனை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |