Categories
மாநில செய்திகள்

படரும் சாதிப் படைக்கு மருந்தாம் மகாகவி பாரதியாரின் 140-ஆவது பிறந்தநாள் இன்று! – முதல்வர் மு.க ஸ்டாலின் ட்விட்!!

படரும் சாதிப் படைக்கு மருந்தாம் மகாகவி பாரதியாரின் 140-ஆவது பிறந்தநாள் இன்று! என முதல்வர் முக ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார்..

மகாகவி பாரதியாரின் 140வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.. பாரதியாரின்  பிறந்த நாளை முன்னிட்டு எட்டயபுரம் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், அன்பில் மகேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாரதியாரை புகழ்ந்து பாராட்டி பலரும்  கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பாரதியாரின் 140வது பிறந்தநாளையொட்டி முதல்வர் முக ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார். அதில்,  நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா! திறம்பாட வந்த மறவன்! அறம்பாட வந்த அறிஞன்! படரும் சாதிப் படைக்கு மருந்தாம் மகாகவி பாரதியாரின் 140-ஆவது பிறந்தநாள் இன்று! தமிழுக்குத் தொண்டுசெய்த அப்பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் நினைவைப் போற்றிடும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடர்ந்திடும்! என்று குறிப்பிட்டுள்ளார்..

எம்.பி கனிமொழி ட்விட்டரில், தன் எழுத்துக்களால் நம் சிந்தனைகளில் தீ மூட்டியவர் மகாகவி பாரதியார். அந்தத் தீயைக் கொண்டு நாம் நம் கண்ணெதிரே இருக்கும் அநீதிகளை எல்லாம் எரிப்போம். காலத்தை வென்ற கவிஞரையும் அவரது எழுத்தையும் என்றும் போற்றுவோம்.” என்று பதிவிட்டுள்ளார்..

எம்.பி தமிழச்சி தங்க பாண்டியன் வெளியிட்டுள்ள பதிவில், ‘எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி’ என்று பாடிய எட்டையபுரத்துக் கவிஞன்; ‘வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண்மொழி’ எனத் தமிழை உயிரெனப் போற்றிய மகாகவி பாரதியின் பிறந்தநாளான இன்று, கரிசல் மண்ணின் பெருமையைப் பாரறியச் செய்த பெருமகனாரின் நீடு புகழ் போற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |