விண்ணில் உள்ள ஆராய்ச்சி மையத்திலிருந்து மாணவர்களுக்கு நேரலை பாட வகுப்புகள் நடத்தப்பட்டத
விண்ணில் சொந்தமாக ஆராய்ச்சி மையம் ஒன்றை சீனா கட்டி வருகிறது. அதற்கு Tianhe என்று பெயர் வைத்துள்ளனர். மேலும் அங்கு நடைபெறும் கட்டுமான பணிகளை கண்காணிப்பதற்காக Zhai Zhigang, Wang Yaping, Ye Guangfu ஆகிய மூன்று வீரர்கள் ஆராய்ச்சி மையத்திலேயே தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் ஆராய்ச்சி மையத்தில் இருந்து சீன மாணவர்களுக்கு நேரலை பாட வகுப்புகளை எடுத்துள்ளனர். மேலும் அவர்கள் மாணவர்களுக்கு ஆராய்ச்சி மையத்தை சுற்றி காண்பித்ததோடு மட்டுமின்றி சுழிய ஈர்ப்புவிசையில் சில சோதனைகளையும் செய்து காட்டியுள்ளனர்.