Categories
மாநில செய்திகள்

ரெடியா இருங்க…! அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்…. சுகாதாரத்துறை உத்தரவு…!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்தால் அதை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுப்பது குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. மத்திய அரசு மற்றும் உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பான தகவல்கள் அனைத்தும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மாநிலத் திட்டக் குழுவின் நோய் தடுப்பு முறைகள் குறித்து புதிய வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. அதன்படி ஒமைக்ரான் பாதிப்புள்ள நாடுகளிலிருந்து தமிழகம் வருவோருக்கு பரிசோதனை நடத்தப்பட வேண்டும். அவர்கள் யாருக்காவது கொரோனா உறுதி செய்யப்பட்டால் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது அவசியம். அனைத்து மாவட்டங்களிலும் 100% தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா அதிகரித்தால் நிலைமையை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து மூன்றாவது அலை அச்சுறுத்தல் எழுந்தபோது அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அதுபோன்ற சூழல் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |