புதுவை, பூமியான்பேட் பகுதியை சேர்ந்தவர் ராமு. இவர் ஒரு கூலி தொழிலாளி. இவருக்கு ஸ்வேதா என்ற மகள் இருக்கிறார். 15 வயதுடைய அவர் அரசு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதையடுத்து கடந்த மாதம் பள்ளிகள் தொடங்கி நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்ற நிலையில், மாணவி ஸ்வேதா உடல்நலக்குறைவு காரணமாக பள்ளிக்கு செல்லவில்லை.
எனவே நேற்று ஸ்வேதாவை பள்ளிக்கு வரவழைத்து ஆசிரியர் கண்டித்ததாக தெரிகிறது. இதையடுத்து வீட்டிற்கு சென்ற ஸ்வேதா, கழிவறையில் தான் அணிந்திருந்த துப்பட்டாவை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்வேதாவின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.