Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

லாரி டயரில் சிக்கிய ஒன்றரை வயது குழந்தை…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குலாலர் தெருவில் வசித்து வருபவர் சுப்பராஜ். இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவருடைய தாய்-தந்தை திருப்பதி, ராசாத்தி ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் கூலித்தொழிலாளி ஒன்றரை வயது மகன் அன்பு செல்வத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மடவார் விளாகம் பகுதியில் அவர்களின் பின்னால் வந்த லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் லாரியின் சக்கரத்தில் மாட்டிக் கொண்ட சிறுவன் அன்புச்செல்வன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சிறுவனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனுடைய தாத்தா, பாட்டி இருவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வெளி மாநிலத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் இசால் விட்டால் தாபேயை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |