Categories
உலக செய்திகள்

“பயணத்தடை மேலும் நீட்டிப்பு!”…. பிரபல நாடு வெளியிட்ட முக்கிய தகவல்…!!

இஸ்ரேல் அரசு, ஒமிக்ரான் தொற்று காரணமாக, பிற நாட்டு பயணிகளின் வருகைக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
ஒமிக்ரான் தொற்று காரணமாக, இஸ்ரேல் நாடு தான் முதல் நாடாக பிறநாட்டு பயணிகள் தங்கள் நாட்டிற்குள் வரத்தடை விதித்தது. தற்போது, ஒமிக்ரான் பரவல் முற்றிலுமாக குறையவில்லை.  எனவே அரசு, பிறநாட்டு பயணிகள் வருகைக்கான தடையை 10 தினங்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
மேலும், தற்போதைய பயண விதிமுறைகளின் படி, பிற நாடுகளிலிருந்து தங்கள் நாட்டிற்கு  திரும்பும், தங்கள் மக்கள், கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, அதற்கான முடிவு வரும் வரை தனிமைப்படுத்தப்படுவார்கள்.
ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நாடுகளிலிருந்து வரும் தங்கள் மக்கள், அரசாங்கம் ஏற்பாடு செய்த ஓட்டலில் தான் தங்கவைக்கப்படுவர் என்று கூறப்பட்டிருக்கிறது.
தற்போது வரை, இஸ்ரேல் நாட்டில் சுமார் 21 நபர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது.

Categories

Tech |