Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குடும்பத்தை பிரிந்த காவலாளி…. விடுதியில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

காவலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லைன் வீதியில் மகாலிங்கம் என்பவரின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக மகாலிங்கம் குடும்பத்தை விட்டு பிரிந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவலில் இருக்கும் ஒரு ஹோட்டலில் தங்கி காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த மகாலிங்கம் தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகாலிங்கத்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |