Categories
மாநில செய்திகள்

மக்களே மீண்டும் ஒரு வாய்ப்பு…. தமிழகம் முழுவதும் நாளை…. யாரும் மிஸ் பண்ணிடாதிங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மெகா தடுப்பூசி முகாம்களை வாரம்தோறும் அரசு நடத்தி வருகிறது. தடுப்பூசி போடுவதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை 13 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு ஒரு கோடிப் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடுப்பூசி முகாம்களிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் நாளை 50 ஆயிரம் மையங்களில் 14 ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அந்த முகாமில் சுமார் 2 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.நாளை நடைபெற உள்ள முகாமில் ஏராளமான தடுப்பூசிகளை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அத்துடன் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடக் கூடிய ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது.

அதனால் தடுப்பூசி முகாம்கள் தற்போது சனிக்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 1600 மையங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது. இதனால் மக்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதால் இரண்டு தவணைத் தடுப்பூசியும் மக்கள் செலுத்திக் கொண்டால் உயிரிழப்பில் இருந்து தப்பிக்கலாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே இந்த வாய்ப்பை தவறவிடாமல் தமிழக மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள்.

Categories

Tech |