Categories
உலக செய்திகள்

“கொரோனா பரவல் அதிகரிப்பு!”… நீதிமன்றங்களை அடைத்த பிரபல நாடு…!!

ஜிம்பாப்வே நாட்டில் கொரோனா தொற்றால் தற்காலிகமாக நீதிமன்றங்கள் அடைக்கப்பட்டுள்ளன.

ஜிம்பாப்வே என்ற ஆப்பிரிக்க நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது அங்கு ஒமிக்ரான் தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதிமன்றத்தில் பணிபுரிந்த பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, அங்கு நீதிமன்றங்கள் தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஜிம்பாப்வேயின், நீதித்துறை பணிகள் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் கொரோனா பரவலை தடுப்பதற்காக கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, அனைத்து நீதிமன்றங்களும்  இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக அடைக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |