Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் VS வெஸ்ட் இண்டீஸ் : பாகிஸ்தான் வந்தடைந்தது வெஸ்ட்இண்டீஸ் அணி …!!!

3 டி20 மற்றும் 3 ஒருநாள் தொடரில்  பங்கேற்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்றுள்ளது.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்காக 26  பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று காலை விமானம் மூலமாக பாகிஸ்தானில் கராச்சி நகருக்கு சென்றுள்ளது குறிப்பாக கடந்த 2018 ஆம் ஆண்டிற்கு  பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் சென்றுள்ளது . இதற்கு முன்பாக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி பாதுகாப்பு பிரச்சினை காரணமாக கடைசி நேரத்தில் போட்டியில் பங்கேற்காமல் நாடு திரும்பியது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு சென்றடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தங்கும் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் இரு அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி வருகின்ற 13 ,14 மற்றும் 16ஆம் தேதிகளிலும், ஒருநாள் போட்டி 18, 20 , 22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது .இதில் காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொலார்ட் , பாபியன் ஆலென், ஒபெட் மெக்காய் ஆகியோர் விலகியுள்ளனர் .அதேபோல் ஹெட்மையர், ஆந்த்ரே ரஸ்செல், சிமோன்ஸ் ஆகியோர் தனிப்பட்ட காரணத்துக்காக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

Categories

Tech |