Categories
மாநில செய்திகள்

புதிய கல்விக் கொள்கை…. உலகை வழிநடத்த உதவும்…. ஆளுநர் கருத்து…!!!!

உலகை இந்தியா வழிநடத்த தேசிய கல்வி கொள்கை உதவும் என்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்துள்ளார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 37 வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி தலைமை தாங்கி மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: “நாட்டின் சுதந்திரத்திற்காக எண்ணிலடங்காதோர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பலர் கொலை செய்யப்பட்டனர். அவர்களில் பலர் தற்போது வரையிலும் அடையாளம் காணப்படவில்லை.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் இது குறித்த ஒரு ஆய்வை நடத்தி நம் நாட்டுக்கு அவர்களின் பங்களிப்பு விவரங்களை அறியும் வகையில் பதிவு செய்ய வேண்டும். புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்ற பாரதியார் மற்றும் பாரதிதாசன் ஆகியோர் கனவை நனவாக்கும் வகையில் தேசிய கல்வி கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது உலகை இந்தியா வழிநடத்த உதவும். இந்தியாவை சமத்துவமான மற்றும் துடிப்பான அறிவுசார் சமூகமாக மாற்றுவதற்கு உதவும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |