இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் கடந்த ஆண்டு மார்ச் முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவை தடை செய்யப்பட்டது. அதன்பிறகு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகு குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் வழக்கமாக சர்வதேச போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் 30 நாடுகளில் பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். அதன்படி பல்வேறு நாடுகளின் எல்லைகளை மூடியுள்ளது. இந்நிலையில் தற்போது சர்வதேச விமான போக்குவரத்து சேவை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.